அடுத்த நயன்தாரா இவரா.?  புலியை பார்த்து சூடுபோட்டுக் கொள்ளும் கிராமத்து நடிகை.!   - Seithipunal
Seithipunal


நடிகை நயன்தாரா தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற படங்களில் மட்டுமே நடிப்பது வழக்கம். இதனால் தான் அவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து வரைக்கும் ரசிகர்கள் கொண்டு சென்றனர். 

அந்த வகையில் நயன்தாராவிற்கு பின்னர் அந்த இடத்தை யார் பிடிப்பார் என்று கேள்வி இருந்த நிலையில், எப்படியாவது அந்த இடத்தை பிடித்து விட வேண்டும் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டம் தீட்டி வருகிறாராம். நயன்தாராவை போலவே ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். 

ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின்களுக்கு ஸ்கோப் இருக்கின்ற படங்களை தான் தேர்ந்தெடுத்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் நடிகை நயன்தாரா முன்பு போல படங்களில் நடிக்க மாட்டார் என்றும், விரைவில் குழந்தை பெற்றுக் கொள்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

எனவே இனிவரும் படங்களில் கதாநாயகர்களுக்கு ஹீரோயினாக நடிக்கும் பழக்கத்தை விடுத்து முழுக்க முழுக்க சிறந்த பெண் கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டம் தீட்டி வருகிறாராம். ஆனால் இந்த தகவலை கேட்டு கோலிவுட் திரையுலகினர் பலரும் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை தான் இது என்று மறைமுகமாக விமர்சித்து வருகின்றனராம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress aishwarya rajesh make sketch To Move big star as lady super star 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->