தனது காதலனை கரம் பிடித்த நடிகை எமி ஜாக்சன்! ரசிகர்கள் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நடிகர் எட்வர்டு வெஸ்ட்விக்கை நடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இவர் தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0, மிஷன் சாப்டர் 1 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்தி, ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார்..

இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜூடனை காதலித்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகாமலேயே ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டு காரணத்தால் அவர்களுக்குள் கடந்த ஆண்டு பிரிவு ஏற்பட்டது. தனது மகன் ஆண்ட்ரியாசுடன் தனியாக வாழ்ந்து வந்த நடிகை எமி ஜாக்சன் இங்கிலாந்து நடிகர் எட்வர்டு வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார்.

மேலும், நடிகர் எட்வர்டு வெஸ்ட்விக்கை நடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொண்டார். இருவரின் திருமணம் இத்தாலி நாட்டின் அமல்ஹி கடற்கரை பகுதியில் நடைபெற்றது. எமி ஜாக்சனின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் எட்வர்டு மற்றும்  நடிகை எமி ஜாக்சன் தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Amy Jackson holding her boyfriend hand Greetings fans


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->