ஒரு காட்சிக்கு ரூ.1 கோடியா? சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஷ்வரன்!
actress Anupama parameswaran increase Salary
2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இந்த திரைப்படம் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தென்னிந்திய ரசிகர்களை இவர் கவர்ந்தார்.
இதனை தொடர்ந்து தமிழில் கொடி என்ற திரைப்படத்தில் தனுசுடன் இணைந்து நடித்தார். தெலுங்கு சினிமாவிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார்.
ரவுடி பாய்ஸ் என்ற தெலுங்கு திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து இவர் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
![](https://img.seithipunal.com/media/amupamaa-xdw2r.jpg)
தற்போது இவர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் 'சைரன்' என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் பட வாய்ப்புக்காக படுக்கை அறையில் நடிக்க உள்ளதாகவும் லிப் லாக் காட்சிகளில் நடிப்பதற்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை சம்பளம் கேட்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக இவர் நடித்த படங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றதால் தனது சம்பளத்தை உயர்த்தியதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
English Summary
actress Anupama parameswaran increase Salary