பாக்கியலட்சுமி ஜெனிக்கா? இந்த மோசமான நிலை.?! அட பாவமே.. அவரே வெளியிட்ட மனக்குமுறல்.! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இதில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றது.

அந்த வகையில் தனது இன்னசென்ட் நடிப்பினால் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர்தான் நடிகை திவ்யா கணேஷ். இவர் ஜெனி எனும் கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகின்றார்.

இவர் பாக்கியலட்சுமி மட்டுமல்லாமல் கேளடி கண்மணி மற்றும் செல்லம்மா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய திவ்யா கணேஷ் தனக்கு நடந்த ஒரு மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

அதில் படப்பிடிப்புகள் முடிந்து ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அவர் பயணித்த போது பின் சீட்டில் இருந்து ஒரு நபர் திவ்யா கணேஷ் மீது அத்துமீறி கை வைத்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த திவ்யா அவரை சரமாரியாக அடித்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து இது மீடியா என்பதால் இதற்கு மேல் வெளிப்படையாக என்னால் பேச முடியவில்லை என்று ஆதங்கத்தையும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Divya Ganesh shared Her bad experience in flight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->