ஜிவி பிரகாஷூக்கு ஜோடியான 'லவ் டுடே' நடிகை.! - Seithipunal
Seithipunal


‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே.  இந்தத் திரைப்படத்தில் நாயகனாகவும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிமுகமாகியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். காதல், காமெடி, பொழுதுபோக்கு என்று 2 கிட்ஸ் விரும்பும் படமாக வந்துள்ள இந்த ‘லவ் டுடே’ திரைப்படத்தில், நடிகர் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டவர்களும் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளியான திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை இப்படம் ரூ.60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில்'லவ் டுடே' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான  நடிகை இவானா அடுத்ததாக ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்த வகையில் 'கள்வன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் பி.வி.சங்கர் இயக்குகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Ivana pair with GV Prakash


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->