பொத்தி பொத்தி அந்த நடிகர் மீது காதல் வளர்த்த மீனா.?! கைவிட்டுப் போன காதலன்.! பின் நடந்த திருமணம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எஜமான் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு  கதாநாயகியாக அறிமுகமானவர் மீனா. தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் இருக்கிறது. அந்தக் குழந்தை தளபதி விஜயின் தெறி படத்தில் நடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த பாதிப்பிலிருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் மீனா. தனது மகள் மற்றும் தோழிகளுடன் நேரத்தை செலவிட்டு மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நடிகை மீனாவை பற்றிய செய்தி ஒன்று தற்போது சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. அந்த செய்திகளின் படி பாலிவுட் முன்னணி நடிகரான ஹ்ரித்திக் ரோஷனை மீனா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து இருந்தாராம்.

துரதிஷ்டவசமாக மீனா தனது காதலை ஹ்ரித்திக் ரோஷனிடம் சொல்வதற்கு முன் ஹிர்த்திக் ரோஷனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டதாம். இதனால் அவரை ஒரு தலையாக காதலித்து வந்த மீனா தனது காதல் ஆசையையும் தனது மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress meena never told love story doing rounds in kollywood


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->