சந்திரயான் 4 திட்டத்திற்கு இரண்டு செயற்கைக்கோள்கள் தேவை; இஸ்ரோ தலைவர்..! - Seithipunal
Seithipunal


'' சந்திரயான்-04 திட்டத்திற்கு 9,200 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் தேவை. இதனை கட்டமைக்க இரண்டு ராக்கெட்கள் பயன்படுத்தப்பட உள்ளன,'' என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: இஸ்ரோ திட்டங்களுக்கு பிரதமர் மோடி ஆதரவாக உள்ளார். கொள்கை மிக்க தலைவராக உள்ளார். விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைத்து சாதனை படைக்கப்பட்டது பல்வேறு விஷயங்களுக்கு உதவியாக இருக்கும். சந்திரயான்-04 திட்டத்திற்கு 9,200 கிலோ செயற்கைக்கோள்கள் தேவை. 

இதனை கட்டமைக்க இரண்டு ராக்கெட்களை பயன்படுத்த போகிறோம். இதற்கு, செயற்கைக்கோள் இணைப்பு பேருதவியாக இருக்கும். தற்போது விண்வெளியில் இணைக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களும் பாதுகாப்பாக இருக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் மிகப்பெரிய முயற்சியை இஸ்ரோ வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம், இந்த சாதனையை படைத்துள்ள நான்காவது நாடு என்ற பெருமை, நம் நாட்டிற்கு கிடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Chandrayaan 4 project requires two satellites


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->