தொழில் தொடங்கிய நடிகை சினேகா: குவியும் பாராட்டுக்கள்!
Actress Sneha started career
தமிழில் வெளியான 'ஆனந்தம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சினேகா. இவர் கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த சினேகா கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான பட்டாசு திரைப்படத்தில் தனுசுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது நடிகர் விஜயுடன் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை தி.நகரில் தான் புதிய தொழிலை துவங்கியுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் அதில்,
![](https://img.seithipunal.com/media/snehaa-sa3k3.jpg)
எனது பிரியமான ரசிகர்களை நீங்கள் எனது சினிமா வாழ்க்கையில் இதுவரை தலைசிறந்த ஆதரவை அளித்துள்ளீர்கள். என் மீது இத்தனை ஆண்டுகளாக காட்டிய அன்புக்கு நான் எப்போதும் நன்றி கடன்பட்டுள்ளேன்.
ஒருவரது கனவு நினைவாகும் தருணம் சிறப்பான ஒன்று. நான் தற்போது அந்த தருணத்தில் இருக்கிறேன். நான் எனது சில்க் புடவைகான ''சினேகாலயா சில்க்ஸ்'' என்னும் கடையை திறந்து இருக்கிறேன்.
எப்பொழுதும் போல உங்களது அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். நடிகை சினேகாவின் இந்த பதிவிற்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Actress Sneha started career