பெண்களின் மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்முறை இல்லை - அதிரவைத்த அலகாபாத் உயர் நீதிமன்றம்.!
allahabad high court order touch womens breasts not harassment
பதினோரு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, இரண்டு இளைஞர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, நீதிமன்றம் இதை பாலியல் வன்கொடுமை முயற்சி என்று கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி, ‘குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை.

ஒரு சிறுமியின் மார்பகங்களைப் பிடிப்பது, அவரின் ஆடைகளை கலைத்து இழுக்க முயற்சிப்பது பாலியல் வன்கொடுமையோ அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டுகளாகாது’ என்றுத் தெரிவித்தார்.
மேலும், அவர்கள் மீது போடப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இருந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கை மாற்றி அமைக்க உத்தரவிட்டார். நீதிபதியின் இந்தத் தீர்ப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
allahabad high court order touch womens breasts not harassment