நீதிமன்றம் சென்ற நடிகை தமன்னா....உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்ன? - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் நகைக்கடை நிறுவனத்திற்கு விளம்பர மாடலாக நடிகை தமன்னா நடித்திருந்தார்.  ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம், அந்த விளம்பரத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதால் அட்டிகா கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தமன்னாவின் விளம்பரங்களை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை  விதித்தது. தடை உத்தரவை மீறி,கோல்டு நிறுவனம், விளம்பரத்தை பயன்படுத்துவதாக கூறி, நடிகை தமன்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மனுவுக்கு பதிலளிக்கும்படி அட்டிகா கோல்ட் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதேபோல் பவர் சோப் நிறுவனத்திற்கு மாடலாக பயன்படுத்திய விளம்பர ஒப்பந்தத்தை மீறி தமது விளம்பரங்களை அந்த நிறுவனம் பயன்படுத்துவதாகக் கூறி, நடிகை தமன்னா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம் சுந்தர் மற்றும் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, எதிர் மனுதராரரான பவர் சோப் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், விசாரணை செப்டம்பர் 12ம் தேதிக்கு
தள்ளிவைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Tamanna went to court What did the High Court order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->