ட்விட்டரில் 'குந்தவை' என மாற்றிய நடிகை த்ரிஷா.. ப்ளூ டிக் பறிப்பு.! - Seithipunal
Seithipunal


மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகியது.

பெரும், எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இது வசூல் ரீதியாக பயங்கரமாக வெற்றி பெற்றது. இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா சிறப்பாக நடித்து ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் நடிகை திரிஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திரிஷா கிருஷ்ணன் என்னும் பெயரை குந்தவை என மாற்றியுள்ளார்.

இந்த நிலையில் ட்விட்டரின் விதிகளின்படி ப்ளூ டிக் பெறுவதற்கு தகுந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களில் இல்லாத பெயரை மாற்றினால் ப்ளூ டிக் பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் காரணமாக நடிகை திரிஷா குந்தவை என பெயர் மாற்றியதால் ட்விட்டர் கணக்கில் இருந்து அவரின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress thrisha twitter Blue tick cancelled for name changed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->