பிரபல தமிழ் நடிகை மரணம்.. சோகத்தில் திரைத்துறையினர்..!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ஐம்பதிற்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை உஷா ராணி. இவர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே சினிமாவில் அறிமுகமானார். 

மலையாளத்தில் 200 படங்களிலும், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். எம்ஜிஆருக்கு ஜோடியாக பட்டிக்காட்டு பொன்னையா படத்திலும், சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக என்னை போல் ஒருவன் படத்திலும், கமலுக்கு ஜோடியாக அரங்கேற்றம் படத்திலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உஷாராணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 62 வயதாகும் இவருக்கு இவரின் உடல் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. 

இவரது இறப்பு தமிழ் திரைத்துறையினர் மட்டுமின்றி மலையாள திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறப்பு செய்தியை நடிகர் பிரித்வி ராஜ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress usha rani passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->