இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது என சசிகலா பேட்டி..!
Sasikala stated that it is wrong to boycott the byelections
'இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது' என சசிகலா கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர்;
"இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது. மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும்.
இன்று தி.மு.க. அரசாங்கம் வீண் செலவு செய்து கொண்டிருக்கிறது, உருப்படியாக எதையும் செய்வது இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை அவர்கள் செய்த அனைத்தையும் பாமர மக்களுக்கு புரியும் வகையில் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்." என்று சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Sasikala stated that it is wrong to boycott the byelections