மீண்டும் மீண்டும் மாற்றப்படும் முல்லை.. செம்ம கடுப்பில் சீரியல் ரசிகர்கள்.!
Again change in mullai in pandian stores serial
தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி நிறைய ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நுல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அதன் பின்னர், இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரமாக நடிகை காவியா அறிவுமணி நடித்துவருகிறார். ஆரம்பகாலத்தில் இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஒருகட்டத்தில் காவியா அறிவுமணியை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் மீண்டும் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கின்ற ஹீரோயின் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், என்ன காரணம் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. மீண்டும் மீண்டும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்ற நடிகைகள் மாற்றப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
English Summary
Again change in mullai in pandian stores serial