உருக்கட்டை, மிரட்டல்! சீமான், 30 பெண்கள் உட்பட 181 மீது ப்பாய்ந்தது வழக்கு! - Seithipunal
Seithipunal


சீமான் உள்ளிட்ட 181 பேர் மீது சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

தந்தை பெரியார் குறித்து சீமான் தெரிவித்த கருத்துகளுக்கு ஆதாரமளிக்காததால், அவரது வீட்டை முற்றுகையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெரியார் ஆதரவாளர்கள் அறிவித்திருந்தனர்.  

அதன்படி, கடந்த 22 ஆம் தேதி பெரியாரிய ஆதரவாளர்கள் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த, சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.  

மேலும், தடுப்புகளை மீறிய அப்போராளிகளை போலீசார் கைது செய்தனர். சுமார் 800 பேர் மீது போலீசார் வழக்கு பதிவும் செய்தனர்.

இந்த சம்பவங்கள் நடந்த அந்த சமயத்தில், சீமான் வீட்டை முற்றுகையிட வந்த பெரியாரிய ஆதரவாளர்களை எதிர்கொள்ள நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் உருட்டுக்கட்டையுடன் சீமான் வீட்டின் முன்பு திரண்டதாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், சீமான் வீட்டின் முன்பு சட்டவிரோதமாக கூடிய 30 பெண்கள் உட்பட 181 மீது மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Seeman Periyar Issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->