சேலம்: ₹10 சோறு போட்டு, 100 கோடி மோசடி! திருமண மண்டபத்தில் குவிந்த மக்கள்!
Salem money scam
சேலத்தில் உள்ள திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் ₹10க்கு உணவு வழங்கப்பட்டது.
ஆனால், மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதும், “முதலீடு செய்தால் 7 மாதங்களில் இரட்டிப்பு திரும்ப கிடைக்கும்” என விளம்பரம் செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு மூலம் மக்களை ஈர்த்த இக்கும்பலுக்கு பலர் ₹50,000 முதல் ₹5 லட்சம் வரை முதலீடு செய்தனர்.
நேற்று, “₹1 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு நாட்களில் ₹2 லட்சம் கிடைக்கும்” என புதிய விளம்பரம் பரப்பப்பட்டது. இதனால் மண்டபத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த கூட்டத்தால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணைக்கு வர, அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த, எந்த ரசீதும் இல்லாமல் இக்கும்பல் ₹100 கோடி வரை வசூலித்தது தெரியவந்தது.
மேலும், அறக்கட்டளை நடத்தும் விஜயா பானுவிற்கு பல மோசடி வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னணியில் மூவரை கைது செய்த போலீசார், பணம் மற்றும் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.