கன்னட திரையுலகில் களமிறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்! யாருக்கு ஜோடியாக தெரியுமா? - Seithipunal
Seithipunal


காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதனை தொடர்ந்து டிரைவர் ஜமுனா, ஃபர்ஹானா, புலிமடா போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் அவருக்கு பெயரை பெற்று தந்தன. 

'தீர காதல்'திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் வெளியான 'டியர்' திரைப்படமும் ரசிகர்கள் இடையே சுமாரான வரவேற்பையே பெற்றது. 

இந்நிலையில் கன்னடத்தில் ''உத்தரகாண்டா'' என்ற திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் கதாநாயகனாக நடிக்க உள்ளார். 

இது தொடர்பான போஸ்டர் ஒன்றை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aishwarya Rajesh act Kannada film 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->