பிக்பாஸ் வீட்டில் நுழைந்த தர்மதுரை பட நடிகை.. குஷியடைந்த ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருப்பதனால், பிக் பாஸ் சீசன் 5 முடிந்து தற்போது 6வது சீசன் வரை வந்துள்ளது. 6 வது சீசன் கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. 

20 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த பிக்பாஸ் 6 நிகழ்ச்சி துவங்கிய ஆரம்பம் முதலே நிறைய சண்டை சச்சரவுகள் ஏற்ப்பட்டன. இதில் 21- வது போட்டியாளராக மைனா நந்தினி நுழைந்தார். இதன் பின், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜி.பி.முத்து தானாகவே வெளியேறினார். 

அடுத்தடுத்து சாந்தி, அசல் கோளார், ஷெரீனா, VJ மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சீ, ஆயீஷா, ஜனனி, தனலட்சுமி உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பல வாரங்கள் கடந்த நிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க்கில் மணிகண்டனின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்துள்ளனர். அதன்படி மணிகண்டனின் சகோதரி பிரபல தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளே நுழைந்துள்ளது அவரது ரசிகர்களை குதூகலிக்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aishwarya Rajesh In bb6 house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->