"படாத பாடு படுத்திய இயக்குனர்" - சொப்பன சுந்தரி பட ஷூட்டிங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் புலம்பல்.! - Seithipunal
Seithipunal


காக்கா முட்டை, வட சென்னை, கா/பெ. ரணசிங்கம், தர்மதுரை போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சமீப காலங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீப காலங்களில் இவர் நடித்த ரன் பேபி ரன் மற்றும் ஜமுனா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் திரைப்படம் சொப்பன சுந்தரி. இந்தத் திரைப்படத்தில் நடிகை தீபாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சார்லஸ் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ரெட்டிஸ் கிங்ஸ்லீ, மைம் கோபி, சாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தை கார்த்திகேயன் ரவிச்சந்திரன், விவின் மற்றும் பாலாஜி சுப்பு ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒருமுறை படப்பிடிப்பின் போது ஒரு அருமையான இடத்திற்கு உங்கள் எல்லோரையும் அழைத்துச் செல்கிறேன் எனக் கூறி டைரக்டர் அந்த இடத்திற்கு அனைவரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். எல்லா நடிகர்களும் உற்சாகமாக அந்த இடத்திற்கு சென்று இருக்கின்றனர்.

அங்கு சென்ற பின்பு தான் தெரிந்திருக்கிறது அந்த இடம் மிகவும் வெப்பமான பகுதி என்று ஐஸ்வர்யா ராஜேஷிற்கு கா/பெ ரண சிங்கம், காக்கா முட்டை, தர்மதுரை போன்ற திரைப்படங்களில் அதிகமான வெப்பமுள்ள பகுதிகளில் நடித்த அனுபவமிருந்தாலும் இந்தப் படத்தில் டைரக்டர் ரொம்பவே அவரை பாடாக படுத்தி விட்டாராம். இந்த படத்தில் நான் பட்ட கஷ்டங்களை நினைத்து பார்க்கும்போது அந்த படங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தத் திரைப்படம் வருகின்ற 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aishwarya Rajesh shares his experience in Soppana Sundari shoot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->