ரஜினியின் லால் சலாம் படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்திற்கு லால் சலாம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் ரஜினிகாந்தின் அடுத்த இரண்டு படங்களை தயாரிக்க அவருடன் ஒப்பந்தம் போட்டது. 

இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். லால் சலாம் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். லால்சலாம் திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக சமீபத்தில் புதிய போஸ்டரை வெளியிட்டது. இதை அடுத்து படத்திற்கான வேலைகளை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மும்முறமாக செய்து வந்தார். 

இப்பவே நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்ப படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள போஸ்டரில் ஹெல்மட், கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு படத்தின் முதல் நாள் சூட்டிங் தொடங்கியுள்ளதாக அந்த அறிவிப்பு கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aishwarya Rajinikanth shared Rajinis lal salam updates


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->