அஜித் படத்தின் இடையே விஜய் பாடல் - கொந்தளித்த அஜித் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடந்து வருவதால், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை, தியேட்டர்களில் புதுப்படங்களை குறைவாகவே வெளியிட பலத் தயாரிப்பாளர்கள் நினைக்கின்றனர். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி கொண்ட, சில ஹிட் படங்களை எடுத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், பழைய படங்களை தமிழ்கத்தில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர். 

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம், தற்போது ரீ-ரிலீஸ் ஆகி பத்து கோடி ரூபாய்க்கும் மேல் கலெக்‌ஷனைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வெளியான தீனா திரைப்படம், அஜித்தின் பிறந்தநாளான மே1ஆம் தேதியான நேற்றைய தினம் ரீ ரீலிஸ் ஆனது.

பிறந்த நாள் செலிபிரேஷனோடு, அவரின் ஹிட் படமும் ரீ ரிலிஸ் ஆனதால், அஜித் ரசிகர்கள் ஏக குஷியாகி, அதிகாலையிலேயே திரையரங்குகள் முன்னால் குவிந்தனர். அதிலும் குறிப்பாக, சென்னை ரோகிணி தியேட்டரில் தீனா படத்தின் இடைவேளையின் போது, விஜயின் கோட் படத்தில் இடம் பெற்ற விசில் போடு பாடல் திரையிடப்பட்டது. இதைப்பார்த்து கடுப்பான அஜித் ரசிகர்கள் விஜய் பாடலை போடாதே என்று சொல்லி, சட்டையைக் கழற்றி, மானிட்டரை மறைத்து கூச்சலில் ஈடுபட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith fans tension for vijay movie song play dheena movie interval time in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->