'அஜித்' படத்தில் இவங்களா? வெளியான சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகும் 'விடாமுயற்சி' படத்தில் நடிகை ரெஜினா கேசன்ட்ரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகை ரெஜினா 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாநகரம்', செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

மேலும் இவர் தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் உருவாகும் 'விடாமுயற்சி' படத்தில் நடிகை ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே அஜர்பைஜானில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பில் விரைவில் நடிகை ரெஜினா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith film update released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->