கடல் கடந்து சென்றும்.. பெண்ணுக்கு உதவிய அஜித்.! அந்த மனசு தான் கடவுள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். சமீபத்தில் இவர் நடித்த துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து  தற்போது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில்  மகிழ் திருமேனி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். பொதுவாகவே அஜித் பட விழாக்கள், இசை வெளியீட்டு நிகழ்வுகள் போன்றவற்றைத் தவிர்த்து வந்தாலும் மக்கள் மத்தியில் அவர் செய்யும் சில செயல்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இது போன்ற ஒரு சம்பவம்  லண்டன் ஏர்போர்ட்டில் நடைபெற்று இருக்கிறது. அங்கு அஜித் ஒரு பெண்ணிற்கு செய்த உதவி  தற்போது வைரலாகி வருகிறது. கை குழந்தையுடன் வந்த பெண்ணிற்கு அஜித் செய்த உதவி தான் தற்போது வெளி வந்திருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்கிறார்.

அந்தப் பதிவில் தனது மனைவி கை குழந்தையுடன் கிளாஸ்கோவிலிருந்து  சென்னைக்கு திரும்பி இருக்கிறார். அப்போது லண்டன் ஏர்போர்ட்டில் வைத்து அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அஜித்தின் அனுமதியுடன் புகைப்படம் எடுத்து இருக்கிறார். அந்தப் பெண்மணி கை குழந்தையுடன் பயணம் செய்திருக்கிறார் மேலும் அவரிடம் அதிகமான லக்கேஜ் இருந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அந்த பெண்மணிக்கு உதவியாக அவரது சூட்கேஸ் மற்றும் கைப்பைகளை  இருக்கை அருகே அமைத்துக் கொடுத்த பின்னரே சென்றிருக்கிறார் அஜித். அந்தப் பெண்மணி நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியும்  எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன அதனால் இந்த கஷ்டங்கள் புரிய முடியும் என தெரிவித்துள்ளார் தல அஜித்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith helped Tamil girl at London airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->