நாளை அஜித் பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பரான சர்ப்ரைஸ்.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை அமராவதி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கடந்த 1993-இல் இயக்குனர் செல்வா இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் அமராவதி. இந்த படத்தின் மூலம்தான் நடிகர் அஜித் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை சோழா பொன்னுரங்கம் தயாரித்து இருந்த நிலையில் இதற்கு சங்கவி ஹீரோயினாக நடித்திருப்பார்.

இந்த நிலையில் நாளை நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் கொண்டாட்டப்பட உள்ளது. இதை முன்னிட்டு அவரது முதல் திரைப்படமான அமராவதி படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

அதற்காக தற்போது இந்த படத்தை நவீன காலத்திற்கு ஏற்றது போல டிஜிட்டல் முறையில் தயாரித்து வெளியிட உள்ளதாக சோழா பொன்னுரங்கம் அறிவித்து இருக்கிறார். இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் தற்போது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith in Amaravati movie re release tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->