சேலம்: பொங்கல் அதுவுமா இப்படி நடக்கனுமா? கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் மரணம்! - Seithipunal
Seithipunal


சேலம் அருகே குட்டையில் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே, ராக்கி பட்டி கிராமத்தைச் சேர்ந்த, சங்கர் என்பவரின் 14 வயது மக்கள் ஸ்ரீ கவியும், அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பவரின் 9 வயது மகன் பிரதீப் ராஜாவும், மாட்டு பொங்கல் பண்டிகைக்காக தாங்கள் வளர்க்கும் ஆடுகளை குளிப்பாட்ட குட்டைக்குச் ஓட்டி சென்றனர்.

சிறுவர்களுடன் முதியவர் ராஜேந்திரன் உடன் சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக சிறுவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதனையடுத்து அக்கம்-பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து இரண்டு சிறுவர்களையும் காப்பாற்ற முயற்சி செய்தும், மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொங்கல் தினத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem lake accident pongal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->