நிர்வாண ஃபோட்டோஷூட் விவகாரம்: ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக மேடையில் ஏறிய பிரபல நடிகை.!
Alia batt about Ranveer Singh
பிரபல நடிகரான ரன்வீர் சிங் கடந்த 21ஆம் தேதி தனது நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இது வைரலான நிலையில் சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது மும்பை போலீசாரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர் ஆலியா பட், தர்மேந்திரா சபானா மற்றும் ஜெயா பச்சன் உள்ளிட்டோருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் 2023 வெளியாக இருக்கிறது.
இத்தகைய நிலையில் ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்து இருப்பது குறித்து நடிகை ஆலியா பட் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இவர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், சமீபத்திய டார்லிங் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, "ஆலியா பட் ரன்வீர் சிங்கிற்க்கு எதிரான எதையுமே நான் கேட்க விரும்பவில்லை. அவருக்கு எதிராக பேசப்படுகின்ற அனைத்து கருத்தையும் என்னால் ஏற்க முடியவில்லை. சக நடிகர் மீது வைக்கப்படும் புகார்களை ஏற்றுக்கொள்ள முடியாது." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Alia batt about Ranveer Singh