விஜய் டிவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆலியா மானசா.! திடீரென எடுத்த முடிவு.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகையான ஆலியா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராஜா ராணி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவினை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். மகள் பிறந்த பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். பின்னர் அவர் இரண்டாவது முறை கர்ப்பம் தரித்ததால், அந்த சீரியலில் இருந்து விலகினார்.

இரண்டாவது பிரசவத்திற்க்கு பின் மீண்டும் ஆலியா மானசா சீரியலில் நடிக்க வருவதாக சமீப காலமாக தகவல் வெளியாகி கொண்டு இருக்கிறது. இதுவரை விஜய் தொலைக்காட்சியில் நடித்து வந்த ஆலியா மானசா இனி சன் டிவியில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

விஜய் டிவியில் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த ஆலியா அந்த தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். அப்படி இருக்க, அவர் திடீரென சன் டிவிக்கு தாவி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alya manasa may act In sun TV


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->