கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக, போலீஸ் சதி.. ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் போலீசாரால் கெஜ்ரிவாலுக்கு  வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க தேர்தல் ஆணையத்தை ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.மேலும் பாஜக தலைமையிலான மத்திய அரசும் டெல்லி காவல்துறையும் அரவிந்த் கேஜ்ரிவாலை கொல்ல சதி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 

இதுதொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அதிஷி மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் சிங் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது  அவர்கள் பேசிய,பஞ்சாப் போலீசாரால் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தாக்குதல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம் என தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் உத்தரவின்படி, கெஜ்ரிவால் மீதான தாக்குதல்கள் குறித்து மத்திய அரசின் கீழ் வரும் டெல்லி காவல்துறை கண்மூடித்தனமாக இருப்பதாக குற்றம் சாட்டிய அவர்கள் .கெஜ்ரிவாலை கொல்லும் சதியில் பாஜகவும், டெல்லி காவல்துறையும் ஈடுபட்டுள்ளனர் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 

மேலும் கெஜ்ரிவாலின்  வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர சதி செய்கிறார்கள் என குறிப்பிட்டுள்ள  அவர்கள்  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டத தாக்குதலில் தொடர்புடையவர்கள்  பாஜக தொண்டரக்ள் என எங்களுடைய விசாரணையில் தெரியவந்தது. என்றும் எங்களுக்கு டெல்லி போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்றும்  அது அமித்ஷாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என தெரிவித்தனர் . மேலும் கெஜ்ரிவாலின் பாதுகாப்பை திரும்பப் பெற்றது மோசமான அரசியல் என்று குறிப்பிட்டுள்ள அவர்கள் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என . இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP police conspiring to kill Kejriwal Aam Aadmi Party allegations


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->