பிணங்களுடன்.. திகிலூட்டும் அமலாபாலின்.. காடவர் ட்ரெயிலர்.!  - Seithipunal
Seithipunal


நடிகை அமலாபால் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் கேடவர். இந்த படத்தை அமலாபால் தான் தயாரிக்கிறார். இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இதன் வெளியீட்டு உரிமத்தை டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. 

இந்த படத்தின் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து, இதில் அமலாபால் ஒரு தடவியல் ஆய்வு நிபுணராக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. கேடவர் என்பதற்கு பிரேதங்கள் என்று பொருள்.

எனவே இந்த படம் மர்மம் நிறைந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான ஒரு போஸ்டரில் நடிகை அமலாபால் பிணங்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு சாப்பிடுவதை போல காட்டப்பட்டிருக்கும். எனவே இது திகிலூட்டும் விதமான கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த திரைப்படத்தில் நடிகைகள் அதுல்யா ரவி மற்றும் பிக் பாஸ் ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனை அறிமுக இயக்குனரான அனுப்.எஸ். பணிக்கர் இயக்கியிருக்கிறார். இதற்கு ரஞ்சன் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amala paul cadaver trailer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->