பாலிவுட்டில் கால்தடம் பதித்த அமலாபால்.! டீசர் வெளியீடு.!
Amala Paul introduced in Bollywood
தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து இவர் மைனா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, தலைவா ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார்.
இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை அமலாபால் முதல் முறையாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையான பர்வீன் பாபியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த வெப் சீரிஸில் தாஹிர் ராஜ் பாசின், அம்ரிதா பூரி மற்றும் அமலாபால் ஆகியோர் நடித்துள்ளனர். ரஞ்சிஷ் ஹி சஹி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
English Summary
Amala Paul introduced in Bollywood