பூமியின் விளிம்பிற்கு செல்லும் பயணத்தில் அமலா பால் வெளியிட்ட புகைப்படம்.!
amala paul journey of edge of the earth photoshoot
கோலிவுட்டில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால். அதன் பின்னர் மைனா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டு அனைவராலும் அமலாபால் அறியப்பட்டார்.
பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பின்னர் அமலாபாலுக்கு திருமணம் நடைபெற்றது. இருப்பினும், திருமண வாழ்வு அவருக்கு பிரச்சினைகள் நிறைந்ததாக இருந்ததால் விவாகரத்து செய்துவிட்டார்.
இத்தகைய நிலையில் தன்னுடைய கெரியரில் அமலாபால் கவனம் செலுத்தி வருகின்றார். தற்போது திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி படத்தை தயாரிக்கவும் அவர் துவங்கியுள்ளார்.
சமூகவலைதளங்களில் தன்னுடைய பெரும்பாலான நேரத்தை அமலாபால் செலவு செய்வதை ஹாபியாக வைத்துள்ளார். அவ்வப்போது முறையாக போட்டோஷூட் நடத்துவதும் வழக்கம்.
இந்த நிலையில் தற்போது நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூமியின் விளிம்பிற்கு செல்லும் பயணம் என்று கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
English Summary
amala paul journey of edge of the earth photoshoot