ஓகோ! இதான் கதையா? நடிகை அமலா பால் புகார் - நீதிமன்றத்தால் அம்பலமான உண்மை! - Seithipunal
Seithipunal


தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான, மலையாள நடிகை அமலா பால், மைனா திரைப்படத்தின் மூலம் பிரபல நடிகையானர். 

பல்வேறு வெற்றி படங்களுக்குப்பின் இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர். 

பின்னர் நடிகை அமலாபால் ஆடை திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்தது பலராலும் பேசப்பட்டது. இந்த நிலையில் , கடந்த வாரம் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் நடிகை அமலா பால் சார்பாக அவரது மேலாளர் புகார் ஒன்றை அளித்தார். 

அந்த புகாரில், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் வீட்டில் தங்கியிருந்தபோது, பவீந்தர் சிங் உள்ளிட்ட சிலர் பாலியல் தொல்லை அளித்ததாகவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் நடிகை அமலா பால் குற்றம்சாட்டியிருந்தார். 

இதனையடுத்து, பவீந்தர் சிங் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, வானூர் நீதிமன்றத்தில் பவ்நிந்தர் சிங் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலா பாலுக்கும் தனக்கு நடந்த பதிவுத் திருமண சான்றிதழை பவீந்தர் சிங் நீதிமன்றத்தில் சமர்பித்தார். இதனையடுத்து அவருக்கு நிபந்தனை ஏதும் இல்லா ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதுநாள் வரை ஆண் நண்பர் என்று அமலாபால் தெரிவிக்க, இன்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amala paul second marriage issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->