பள்ளத்தில் கவிழ்ந்த காய்கறி லாரி - 10 பேர் பலி; 15 பேர் படுகாயம்.!
ten peoples died and 15 peoples injured for accident in karnataga
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி மாவட்டத்தின் சவனூரில் இருந்து 25க்கும் மேற்பட்டோர் காய்கறிகளை லாரியில் ஏற்றி கொண்டு உத்தர கன்னடம் மாவட்டத்தின் கும்தா பகுதியில் உள்ள சந்தை நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.
அதன் படி இந்த லாரி அர்பைல் காட் என்ற பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 10 காய்கறி வியாபாரிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்தனர்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
ten peoples died and 15 peoples injured for accident in karnataga