அமலாக்கத்துறையிடம் நேரில் ஆஜரான திமுக எம்பி! கைப்பற்றப்பட்ட கோடி கணக்கான பணம்!
ED Case DMK MP Kathir ananth
2019 மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், புகாரின் அடிப்படையில் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் எம்பி கதிர் ஆனந்தின் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
மேலும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினரின் சிமெண்ட் குடோனில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ₹11.51 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கதிர் ஆனந்த் மற்றும் பூஞ்சோலை சீனிவாசனின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில்
இதனையடுத்து வேலூர் தொகுதிக்கு நடந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நடந்த தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று எம்பி ஆனார்.
அதே சமயத்தில் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து, அனமயில் கதிர் ஆனந்தின் கல்லூரி மற்றும் பூஞ்சோலை சீனிவாசனின் வீடுகளில் 2 நாட்கள் சோதனை செய்தது. சோதனையில் ₹14 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் ₹75 லட்சம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், அமலாக்கத்துறை சம்மனின் பேரில், கதிர் ஆனந்த் எம்.பி., இன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்த அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
English Summary
ED Case DMK MP Kathir ananth