அரசு போட்டித் தேர்வை புதிய தேர்வுமுறைப்படி நடத்த வேண்டும்..புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


அரசு போட்டித் தேர்வுகளுக்கான பொது எழுத்துத் தேர்வு முறை அமல்படுத்துதல் மற்றும் அசிஸ்டெண்ட் எழுத்துத் தேர்வை புதிய தேர்வுமுறைப்படி நடத்த வேண்டும் என்று புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசுப் பணியாளர் மற்றும் சீர்த்திருத்தத் துறை (தேர்வுகள்), புதுச்சேரிதேர்வுக் கட்டுப்பாட்டாளர் அரசுச் செயலர், பங்கஜ் குமார் ஜா, ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர்  சுவாமிநாதன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: 

வணக்கம்.  சமீபத்தில் DPAR – Exam Cell வெளியிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கான உத்தேச பொதுத் தேர்வு முறை இறுதிவடிவம் செய்யப்பட்டு, எப்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்றும்,   பட்டதாரிகள் மற்றும் சமூக அமைப்பினரின் கோரிக்கைக்கு இணங்க பட்டப்படிப்பு தரத்திலான தேர்வுகளில் அனைத்து பாடப்பிரிவு பட்டதாரிகளுக்கும், கலை, இலக்கியம்,சட்டம், பொருளாதாரம் உள்ளிட்ட பட்டதாரிகளுக்கும், சம வாய்ப்பு வழங்கும் வகையில், பொதுஅறிவு பாடப்பிரிவிற்கு 50 சதவீத மதிப்பெண்கள் அளிக்கப்பட வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையின் தற்போதைய நிலை என்னவென்றும் தெரியாமல் போட்டித் தேர்வர்கள் மாபெரும் குழப்பத்தில் உள்ளனர்.

கடந்த  ஆறு மாதங்களுக்கு முன்னர்  நோட்டிஃபிகேஷன் வெளியிடப்பட்ட அசிஸ்டெண்ட் பதவிக்கான தேர்வு இதுவரை நடத்தாத நிலையில், இடையில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட உத்தேச பொது எழுத்துத் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டு அதனடிப்படையில் அசிஸ்டெண்ட் எழுத்துத்தேர்வு இருக்குமா அல்லது நோட்டிஃபிகேஷனில் கூறப்பட்டிருந்த முறையில் Tier-I, Tier-II என பாரபட்ச முறையே பின்பற்றப்படுமா என தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் குழம்பியுள்ளனர்.

இந்நிலையில், எமது  அமைப்பு வாயிலாக அனைத்து பட்டதாரி இளைஞர்களின் சார்பாக,, எல்லா பாடப்பிரிவினருக்கும் சமவாய்ப்பு வழங்கும்முறையில் பொது எழுத்துத் தேர்வு முறையினை உரிய மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்த அறிவிப்பு வெளியிட்டு, அதனடிப்படையில் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 

இந்த பொதுத்தேர்வு முறை அமல்படுத்துவதன்மூலம் அசிஸ்டெண்ட் பதவிக்கான இரட்டை எழுத்துத் தேர்வுகள் (Tier-I, Tier-II) எனும் தேவையற்ற நடைமுறை சிக்கலை தவிர்க்கலாம். எதிர்வரும் மாநில பட்ஜெட், பள்ளி பொதுத்தேர்வுகள் என பல்வேறு காரணங்களால் அசிஸ்டெண்ட் போட்டித்தேர்வு சில மாதங்களுக்கு தள்ளிப் போகலாம் என பரவலாக தேர்வர்கள் மத்தியில் பேச்சுகள் நிலவும் நிலையில், பொதுத் தேர்வு முறையை உடனடியாக அறிவித்தால், அத்தேர்வு முறைக்கேற்ப அசிஸ்டெண்ட் மற்றும் எதிர்வரும் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளும் தயாராக போதுமான நேரம் கிடைக்கும்.

பொதுத்தேர்வு முறையை அசிஸ்டெண்ட் தேர்வுக்கு பின்னர் கொண்டுவந்தால், பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கான சம வாய்ப்பு இப்பதவியில் மறுக்கப்படும். மேலும் இத்தகைய வாய்ப்பு மீண்டும் விண்ணப்பித்தவர்களுக்கு  கிடைக்காது என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். 

எனவே, பொது எழுத்து தேர்வு முறையை விரைந்து அறிவித்து , அனைத்து பட்டதாரிகளுக்கும் சம வாய்ப்பிலான முறையிலேயே எதிர்வரும் அனைத்து தேர்வுகளையும் நடத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  கேட்டுக் கொள்கிறோம்மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்கள்,மாண்புமிகு முதலமைச்சர், புதுச்சேரி,உயர்திரு.தலைமைச் செயலர், புதுச்சேரிஉயர்திரு.கேசவன், ஐ.ஏ.எஸ், அரசுச் செயலர், DP&AR, புதுச்சேரி அவர்களுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The government should conduct the competitive examination according to the new selection system Puducherry Union Territory Students Federation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->