மேஜர் முகுந்த் வரதராஜனின் பிறந்தநாளையொட்டி வீடியோ வெளியிட்டுள்ள "அமரன்" படக்குழு; இணையத்தில் வைரல்..!
Amaran team releases video on the occasion of Major Mukund Varadarajan birthday
நடிகர் சிவகார்த்திகேயன் , நடிகை சாய்பல்லவி நடிப்பில் உருவான 'அமரன்' திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
உலகளவில் கிட்டதட்ட 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'அமரன்' திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படம் சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் மேஜர் முகுந்த் பிறந்தநாளையொட்டி "அமரன்" படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. "உலகிற்கு, அவர் ஒரு ஹீரோ. அவரது குடும்பத்திற்கு, ஒரு இதயத் துடிப்பு. நாட்டிற்கு அவர் ஒரு ஜாம்பவான். மேஜர் முகுந்த் வரதராஜனுக்ககு பிறந்தநாள் வாழ்த்து. " என்று கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Amaran team releases video on the occasion of Major Mukund Varadarajan birthday