தூத்துக்குடி வியாபாரியிடம் ரூ. 5 லட்சம் திருட்டு.. மதுரையில் வைத்து வாலிபரை கைது செய்த போலீஸ்!
Thoothukudi merchant has Rs. Theft of 5 lakhs. Police arrest youth in Madurai
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தூத்துக்குடி வியாபாரியிடம் ரூ. 5 லட்சம் திருடிய வாலிபரை மதுரையில் வைத்து கைது செய்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த 39 வயதான செல்வகுமார் என்பவர் திருப்பதியில் பால்கோவா கடை நடத்தி வருகிறார்.சம்பவத்தன்று செல்வகுமார் கைப்பையில் ரூ. 5 லட்சம் பணத்துடன் திருப்பதியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது வேலூர் புதிய பஸ் நிலையம் பஸ் வந்ததும் வாலிபர் ஒருவர் அந்த பஸ்சில் எறியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் செல்வகுமாரிடம் தனக்கு பணம் தேவைப்படுகிறது என்றும் நான் உங்களுக்கு யு.பி.ஐ மூலம் பணம் அனுப்புகிறேன் என்றும் எனக்கு பணமாகக் கொடுங்கள் என கேட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. செல்வகுமார் பஸ்சிலிருந்து கீழே இறங்கி அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றபோது அதனை நோட்டமிட்ட அந்த நபர் பையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் பணத்தை திருடி சென்ற தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை அடுத்த விஸ்வாசபுரத்தை சேர்ந்த கதிர்வேல் என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் மதுரையில் வைத்து அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Thoothukudi merchant has Rs. Theft of 5 lakhs. Police arrest youth in Madurai