பட்டியலினத்தை வகைப்படுத்திய தெலுங்கானா அரசு - நாட்டிலேயே முதல் மாநிலமாக அறிவிப்பு.!!
scheduled caste classified in telungana
தெலுங்கானா மாநிலத்தில் அரசு பணி மற்றும் கல்வியில் பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கப்படும் 15 சதவீத இடஒதுக்கீட்டை நியாயமாக பிரித்துக்கொள்ளும் வகையில் பட்டியல் சமூகத்தினரை வகைப்படுத்த அரசு முடிவு செய்து, இதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சமீம் அக்தர் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தது.
இந்த குழுவினர் மாநிலத்தில் மொத்தமுள்ள 59 பட்டியல் சமூகங்களை 3 பிரிவாக வகைப்படுத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் படி 15 சமூகங்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையிலும், 18 சமூகங்களுக்கு 9 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையிலும், 26 சமூகங்களுக்கு 5 சதவீதம் வழங்கும் வகையிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக்கொண்ட மாநில அரசு, கடந்த மாதம் சட்டசபையில் மசோதாவையும் நிறைவேற்றியது. அதை சட்டமாக்கி நேற்று அரசிதழில் வெளியிட்டது. இந்த சட்டப்படி மாநிலத்தில் இடஒதுக்கீடு அமலாகி இருப்பதாக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார். இதன் மூலம் பட்டியலினத்தவரை வகைப்படுத்தியதில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தெலுங்கானா மாறியிருப்பதாக தெரிவித்தார்.
English Summary
scheduled caste classified in telungana