உலகின் 10 பரபரப்பான விமான நிலையம் - டெல்லி விமான நிலையத்திற்கு எத்தனையாவது இடம்? - Seithipunal
Seithipunal


உலகின் முதல் 10 பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலை ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்த விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

அதாவது கடந்த 2024 ஆம் ஆண்டின் உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் இந்தியாவைச் சேர்ந்த டெல்லி விமான நிலையம் 9வது இடத்தைப் பிடித்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை.

2024 ஆம் ஆண்டில் டெல்லி விமான நிலையத்திலிருந்து 7.7 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டில் ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ACIE) டெல்லி விமான நிலையத்தை 17வது இடத்தில் வைத்திருந்தது. பின்னர் 2021 இல் 13வது இடத்தையும் 2023 இல் 10வது இடத்தையும் அடைந்தது.

டெல்லி விமான நிலையத்தின் இந்த முன்னேற்றத்திற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை உள்கட்டமைப்பு மேம்பாடு, உலகளாவிய இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் மீதான அர்ப்பணிப்பு உள்ளிட்டவை தான்.

அதிலும் குறிப்பாக டெல்லி விமான நிலையம் நிலைத்தன்மை முன்னணியிலும் வெற்றி பெற்றுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கார்பன் நடுநிலை இலக்குகள் மற்றும் சர்வதேச சான்றிதழ் ஆகியவை விமான நிலையத்தை இன்னும் சிறப்பாக்கியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

delhi airport won 9th place of world busiest airport


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->