பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ரூ.10 லட்சம் அபராதம்! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஆன்லைன் வணிகத்தளமான பிளிப்கார்ட் 'பிக் பில்லியன் டே' என்ற நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவது வழக்கம். 

அது போல் இந்த ஆண்டும் பிக் பில்லியன் டே விற்பனை காண விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். 

தற்போது இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விளம்பரத்தில் அமிதாப் பச்சன் பிளிப்கார்ட்டில் தருவது போன்ற சலுகை, சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்காது என பேசி இருப்பதாக தெரிகிறது. 

இந்த கருத்தினால் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.m நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நுகர்வோரை தவறான பாதையில் வழி நடத்தும் விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் எனவும் பிளிப்கார்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சனுக்கு ரூ. 10 லட்சம் அபராதம் வித்திக்க வேண்டும் எனவும் சிஏஐடி, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. 

மேலும் ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது போன்ற விளம்பரத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதால் மேலும் நஷ்டம் ஏற்படுகிறது. 

எனவே இது போன்ற விளம்பரத்தை தடை செய்து நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amitabh Bachchan against CIAD files complaint


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->