நாவில் எச்சில் ஊற வைக்கும் பால்பன்..!
how to make balban
வீட்டிலேயே சுவையான பால்பன் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
மைதா மாவு
சர்க்கரை
ஏலக்காய் தூள்
தயிர்
நெய்
உப்பு
பேக்கிங் சோடா
எண்ணெய்
செய்முறை:
முதலில் சர்க்கரையை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், மைதா மாவு, ஏலக்காய் தூள், தயிர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு, நெய் சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போன்று பிசைந்து கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு கடாயில் சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக சேர்த்து பொரித்து எடுத்து சர்க்கரைப்பாகில் சேர்த்தால் சுவையான பால்பன் ரெடி.