பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட தடை! பின்னணியில் இரண்டாம் குத்து!
Pisasu 2 Chennai High Court order
பிசாசு 2 திரைப்படத்தின் வெளியீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இரண்டாம் குத்து படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், ஒப்பந்தத்தின்படி ரூ.4.85 கோடியிலிருந்து ரூ.2 கோடி பணம் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியஸ்தர் உத்தரவின்படி நிலுவைத் தொகையை வழங்காமல், ராக்போர்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தை தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
English Summary
Pisasu 2 Chennai High Court order