டிரினிடாட் அண்ட் டொபாகா நாட்டின் பிரதமராகும் இந்திய வம்சாவளி பெண்: பிரதமர் மோடி வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


கரீபியன் தீவு கூட்டங்களில் ஒன்றான டிரினிடாட் அண்ட் டொபாகா தீவில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. இதில், ஆளும் மக்கள் தேசிய இயக்கத்தை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய காங்கிரஸ் கட்சி  தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இக்கட்சியின் தலைவராக உள்ள கமலா பிரசாத் பிசேசார் பிரதமர் ஆக பதவியேற்கவுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா பிரசாத் பிசேசார் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இவர் 2010 முதல் 2015 வரை பிரதமராக பதவி வகித்துள்ளார். இங்கு பிரதமராக பதவிவகித்த ஒரே பெண் இவர் ஆவார். கமலா பிரசாத்தின் இவரது தந்தை வழி முன்னோர்கள் பீஹாரின் பெஹல்பூரை சேர்ந்தவர்கள் எனவும், தாய் வழி முன்னோர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் காமன்வெலத் நாடுகளின் தலைவராகவும் பதவி வகித்து உள்ளத்தோடு, இந்தியாவிற்கு வெளியே, இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் பிரதமர் இவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு, பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கி கௌரவித்தது. சிறந்த நிர்வாகத்திற்காக சர்வதேச அமைப்புகள் வெளியிட்ட பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

தற்போது, இரண்டாவது முறையாக பதவி ஏற்கவுள்ள டிரினிடாட் கமலா பிரசாத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;

தேர்தலில் வெற்றி பெற்ற கமலா பிரசாத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். டிரினிடாட் மற்றும் டொபாகோ உடன் உள்ள வரலாற்று ரீதியான உறவுகளை நாம் கொண்டாடுவோம். நமது மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக நமது ஒத்துழைப்பை பலப்படுத்த இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என்று அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian origin woman to be the Prime Minister of Trinidad and Tobago Prime Minister Modi congratulates


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->