அண்ணா வரார் வழிவிடு..! விநாயகர் சதுர்த்தியன்று 5000 திரைகளில் வெளியாகும் "தி கோட்" திரைப்படம்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் 68வது படம் "தி கோட்" . இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய், முதன் முறையாக ‘தி கோட்’ படத்தில் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், சமீபத்தில் அனைத்து கிராஃபிக்ஸ் மற்றும் டெக்னாலஜி பணிகளும் நடைப்பெற்று முடிவடைந்துள்ளது.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்ச்சம் பெற்றது, ஆனால் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இப்படத்தின் 4-வது பாடலான ‘மட்ட’ பாடல் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் செப் 5 -ல் வெளியாக உள்ள நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் புரமோஷன் பணிகளில் தீவிரமாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் முன்பதிவு தொடங்கியதில் இருந்து இதுவரை இப்படம் ரூ. 1.50 கோடியை ஈட்டியுள்ளது. மேலும், கேரளாவில்  மட்டும் முதல்நாளில் 700 திரைகளில் 4000 காட்சிகளுடன் தி கோட்  திரைப்படம் வெளியாகிறது. நடிகர் விஜயின் இந்த படம் கேரளாவில் மிகப்பெரிய வெளியீடு என அப்படத்தின் கேரள உரிமம் பெற்ற ஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் 1100 திரையரங்குகளிலும் வடமாநிலங்களில் 1000 திரையரங்குகளிலும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரையரங்குகளில் "தி கோட்" திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதால் தி கோட்" முதல் நாளில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது என தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anna will come, give way The Goat movie to be released in 5000 screens on Vinayagar Chaturthi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->