பொங்கல் தினத்தில் டிவியில் ஒளிபரப்பாகும் அண்ணாத்த திரைப்படம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

கடந்த தீபாவளி அன்று வெளியான அண்ணாதுரை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குடும்பம் குடும்பமாக அண்ணாத்த திரைப்படத்தை காண திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் 'அண்ணாத்த' திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சன் தொலைக்காட்சியில் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annatha movie release in pongal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->