ஜி.வி.பிரகாஷின் புதிய படத்தை பார்த்த, Dr.அன்புமணி ராமதாஸ் ட்வீட்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் கௌதம் மேனன் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் நடித்துள்ள திரைப்படம் தான் செல்பி. இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

இத்தகைய சூழலில், இந்த திரைப்படத்தின் பிரிவியூ ஷோ சமீபத்தில் திரையிடப்பட்டது. இதனை பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்த்துவிட்டு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த திரைப்படம் கல்வித் துறையில் இருக்கும் ஊழல்களை வெளிப்படுத்துகிறது. மேலும், நீட் தேர்வால் நிகழும் தற்கொலைகள் குறித்து மிகவும் துணிச்சலாக பேசியுள்ளது. 

ஜிவி பிரகாஷின் சிறந்த திரைப்படங்களில் செல்பி திரைப்படம் முக்கியமான ஒன்று. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anubamani ramadoss about GVP selfie movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->