ஜெயிலர் 2, கூலி! முக்கிய அப்டேட்களை வெளியிட்ட நடிகர் ரஜினி!
rajinikanth press meet Kooli Jailer 2
பிரபல நடிகர் ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ திரைப்படப் படப்பிடிப்பிற்காக கோவைக்கு புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நடிகர் ரஜினி தெரிவிக்கையில், "முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த நடிகர் ரஜினி, “அவர் தூய்மையான அரசியல்வாதி, நல்ல மனிதர். அவரது குடும்பத்திற்கும் நெருங்கியவர்களுக்கும் என் இரங்கல்கள்,” என்று குறிப்பிட்டார்.
தற்போது நடிப்பில் பிஸியாக உள்ள ரஜினி, தனது அடுத்த இரண்டு திரைப்படங்களையும் பற்றி பேசினார். “கூலி படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகிறது. பட வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது” என்றும், “ஜெயிலர் பாகம் 2 ஆரம்பிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. எப்போது முடியும் என்பது குறித்து துல்லியமான தேதி சொல்ல முடியவில்லை. ஆனால் படப்பிடிப்பு நல்ல வேகத்தில் செல்கிறது” என்றும் தெரிவித்தார்.
மேலும் இன்று வெளியான அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்துக்காக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
English Summary
rajinikanth press meet Kooli Jailer 2