பரபரப்பு.. அதிமுகவில் இருந்து விலகும் முக்கிய புள்ளி - யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலாகவும் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரும், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமாக இருந்த சந்திரசேகர், தற்போது அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சந்திரசேகர் கடந்த, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், தெற்கு தொகுதியை பாஜக-வுக்கு ஒதுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், வடக்கு தொகுதி மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனனுக்கு வழங்கப்பட்டது. 

அதனால், சந்திரசேகர் உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவியை போட்டியிடச் செய்து, மேயராக்க திட்டமிட்டு, அதன்படி அவரது மனைவியும், 38வது வார்டில் போட்டியிட்டு, கவுன்சிலரானார். அந்தத் தேர்தலில் மூன்று வார்டுகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றதால் மேயராக முடியவில்லை.

இதையடுத்து கடந்த, 2022 ஆம் ஆண்டு வேலுமணி வீடு மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையின்போது, சந்திரசேகரும் சிக்கினார். அவரது வீட்டில் இருந்து ஆவணங்கள், லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றிச் சென்றனர். 

அதன் பின்பு, கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்த இவரை திமுக-வுக்கு இழுப்பதற்கான முயற்சிகள் சில மாதங்களாக மறைமுகமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக, கட்சியில் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக, சந்திரசேகர் நேற்றிரவு தெரிவித்துள்ளார். சந்திரசேகரின் இந்த திடீர் அறிவிப்பு அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chandrasekar resign posting from admk


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->