அந்த நடிகருடன் இனி நா நடிக்கவே மாட்டேன் - ஒற்றைக்காலில் நிற்கும் அனுஷ்கா.!
anushka in confused action
சூர்யா நடித்த சிங்கம் மூன்று பகுதிகளிலும், அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து இருந்தார். இந்த நிலையில் மீண்டும் சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க அனுஷ்கா மறுத்து விட்டதாக செய்தி ஒன்று வலம் வந்துகொண்டிருக்கின்றது.
அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், சூர்யா ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கி இருக்கும் நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்ததாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து படக்குழுவினர் அனுஷ்காவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நேரத்தில் சம்பளம் 15 கோடி கேட்டதால் அவர்கள் அதிர்ச்சியடைந்து வெறுங்கையுடன் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சூர்யாவுடன் இணைந்து நடிக்க விருப்பம் இல்லாத காரணத்தால் அனுஷ்கா இப்படி அதிக சம்பளம் கேட்டு இருக்கின்றார் என்ற ஒரு செய்தி பரவி வருகின்றது. சிங்கம் படத்தில் நடித்த பின்னர்தான் அவருக்கு நல்ல மார்க்கெட் தமிழில் கிடைத்தது.
ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு அனுஷ்காவின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பது பலரின் கேள்வியாக இருக்கின்றது. ஆனால், தற்போது ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்து வருகின்றார். காரணமே இல்லாமல் அவர் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருக்கின்றார். அவர் நடிக்க மறுப்பதற்கு என்ன காரணம் என்று அனைவருக்கும் கேள்வி எழுகின்றது.
English Summary
anushka in confused action