ஈரோடு இடைத் தேர்தல் - 3 நாட்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய அனுமதி..!
only three days allowed nomination filed for erode by election
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இளங்கோவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து அந்தத் தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ந்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகவுள்ளது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 10-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை நீங்கலாக வருகிற 10-ம் தேதி 13-ம் தேதி 17-ம் தேதி உள்ளிட்ட மூன்று நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மூன்று நாட்களும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
only three days allowed nomination filed for erode by election